Dumpt.com
Gause aazam bamane be
saro sama madade Kibla-e-di
madade kaaba-e-ima
madade,
ALMADAD YA SHAIKH
MOHIYUDDIN ABDULKADIR
JILANI. EID-E-GAUSIA MUBARAK
HO.

Sunday, February 9, 2014

ஜியாரத் - ஓர் ஆய்வு

ஜியாரத் - ஓர் ஆய்வு ஜியாரத் செய்வதன் சட்டமும் ஒழுங்கும்: கப்ருகளைக்
கண்ணியப்படுத்தல்: ஹளரத் இப்னு சயீத் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸ்
ஜனாஸாக்களையும், கப்ருகளையும் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதை
வலியுறுத்துகின்றது. 01 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
நவின்றார்கள்: "ஜனாஸாவை நீங்கள் கண்டால் எழுந்திருங்கள்". ஆதாரம்:
புகாரி, முஸ்லிம் மிஷ்காத்: பாகம் 01 பக்கம் 144. "கப்ருகளின் மேல்
அமராதீர்கள். இன்னும் கப்ருகளை முன்னோக்கி தொழவும் செய்யாதீர்கள்"
ஆதாரம்: முஸ்லிம். பாகம் 01, பக்கம் 312. 02 இமாம் ராஸி ரஹ்மத்துல்லாஹி
அலைஹி கூறுகின்றார்கள்: "ஷுஹதாக்களின் கப்ருகளை ஜியாரத் செய்வதுடன்
அவர்களின் கப்ருகளையும் கண்ணியப்படுத்தும் வழக்கத்தை நிச்சயமாக மக்கள்
செய்துக் கொண்டிருந்தனர். ஷுஹதாக்கள் கப்றில் உயிருடன் உள்ளனர் என்பதற்கு
இது தக்க சான்றாக உள்ளது". ஆதாரம்: தப்ஸீர் ராஸி (கபீர்), பாகம் 04,
பக்கம் 147. 03 மிஷ்காத்தின் விரிவுரையான "லம்ஆத்" என்ற நூலில் இமாம்
அப்துல் ஹக் முஹத்திக் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி எழுதுகின்றார்கள்.
"ஜியாரத் செய்யும் போது முடிந்தளவு மையித்தை கண்ணியப்படுத்துவது
அவசியமாகும். குறிப்பாக சாலிஹான நல்லடியார்களை ஜியாரத் செய்யும் போது
உள்ளும், புறமும் ஒழுக்கமும், வெட்கமும் கலந்த நிலையில் நடந்து கொள்ள
வேண்டும். ஜியாரத்து செய்பவரின் ஒழுக்கம், பக்தி, அடக்கம்
ஆகியவற்றினடிப்படையில் தான் கபுறாளிகளின் உதவிகள் கிட்டும். ஆதாரம்:
லம்ஆத், மிஷ்காத் பக்கம் 154. கப்ருகளுக்கு போர்வை போடலாமா? வலிமார்களின்
கப்ருகளுக்கு போர்வை போடுதல் வலிமார்களை கண்ணியப்படுத்துவதில்
உள்ளதாகும். "இன்னமா யஃமுறு மஸாஜிதல்லாஹ்" என்ற திருமறை வசனத்திற்கு
தப்ஸீர் றூஹுல் பயான் ஆசிரியரான அல்லாமா இஸ்மாயில் ஹக்கி ரஹ்மத்துல்லாஹி
அலைஹி பின்வருமாறு விளக்கம் எழுதும் போது இவ்வாறு வரைகின்றார்கள்:
"கஷ்புன் நூர் அன் அஸ்ஹாபில் குபூர்" என்ற நூலில் அஷ்ஷெய்கு அப்துல்ஙனி
நாபிலிஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு எழுது (இந்த நூலின் தமிழ்
மொழி பெயர்ப்பு "கஷ்பின் வெளிச்சத்தில் கபுறுவாசிகள்" என்ற தலைப்பில்
புஷ்றாவில் தொடராக வெளிவந்துள்ளது என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது)
"உலமாக்கள் மற்றும் வலிமார்கள் சாலிஹீன்களுடைய கப்றுகள் மேல் குப்பாக்கள்
கட்டுவதும், போர்வை போடுவதும், விரிப்புக்கள் போடுவதும், தலைப்பாகை
சூடுவதும் ஆகுமான செயலாகும். பொதுமக்கள் பார்வையில் இவர்களை கேவலமாக
நோக்காமல் கண்ணியத்தை வெளிப்படுத்துவதாகும். இது போன்றுதான் வலிமார்களின்
கபுறுகளில் விளக்கேற்றுவதும், மெழுகுவர்த்தி எரியவைப்பதும் அவர்களைக்
கண்ணியப்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும். இதன் நோக்கம் உயர்வானதாகும்.
வலிமார்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கிலும் அவர்கள் மீது அன்புவைத்தும்
எண்ணெய், மெழுகுபத்தி உள்ளவற்றை நேர்ச்சை செய்வதும் ஆகுமானவையாகும்.
இதனைத் தடை செய்வது ஒருபோதும் கூடாது. ஆதாரம்: தப்ஸீர் றூஹுல் பயான்,
பாகம் 03, பக்கம் 400. கப்றை முத்தமிடலாமா? ஹளரத் அபூபக்கர் ரலியல்லாஹு
அன்ஹு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தான பின்
நபியவர்களை முத்தமிட்டார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா நாயகி, இப்னு அப்பாஸ்
ரழியல்லாஹு அன்ஹுமா, நூல்: புகாரி, பாகம் 02, பக்கம் 641. ஹாபிழ் இப்னு
ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். கஃபாவின் தூண்களை
முத்தமிடுவதை ஷரீஅத் அனுமதித்துள்ளது. இதிலிருந்து கப்றுகளையும்
முத்தமிடலாம் என்று அறிஞர்கள் சட்டம் எடுத்துள்ளனர்.
கண்ணியத்திற்குரியவர்களையும் கண்ணியத்திற்குரிய பொருட்களையும்
முத்தமிடுவது ஆகும். இந்த வகையில் பெரியவர்களின் கைகளை முத்தமிடுவதும்
ஆகும் என "கிதாபுல் அதப்" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மின்பரையும், அன்னாரின் புனித
ரெளலாவையும் முத்தமிடுவது கூடுமா? என்று இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்
ரஹ்மத்துல்லாஹி அலைஹி இடத்தில் கேட்ட போது அதில் எதுவித குறையும் இல்லை
என்று விடை பகர்ந்தார்கள். ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களுள் ஒருவரான
அபுஸ்ஸைப் அல்யமானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி மூலம் இவ்வாறு கூறப்படுகின்றது.
திருக்குர்ஆன் முஸ்ஹபுக்களையும், ஹதீஸ் கிரந்தங்களையும் முத்தமிடுவது
ஆகுமானதாகும். ஆதாரம்: பத்ஹுல்பாரி, பாகம் 03, பக்கம் 475.
வெளியீட்டாளர்: ஆசிரியர் மெளலவி ஏ.ஏல். பதுறுத்தீன் ஷர்க்கி, புஷ்றா-
நற்செய்தி, அட்டாளைச்சேனை, இலங்கை.